Showing posts with label முதல் காதல். Show all posts
Showing posts with label முதல் காதல். Show all posts

Sunday, July 3, 2011

முதல் காதல்

அண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு நேயரின் கடிதம் ஒன்று வாசிக்க கேட்டேன், அதில் அந்த நேயர், தன் முதல் காதலை பெற்றோரின் பிடிவாதத்தால் கை விட்டதாகவும், தனக்கு இப்போது மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், இருந்தாலும் தனிமையில் தான் இருக்கும் போது தன் முதல் காதல் நினைவலைகள் கொவ்வுவதாகவும், தான் தன் மூன்று குழந்தைகளோடு நான்காவது குழந்தையாய் தன் முதல் காதலை நெஞ்சத்தில் சுமப்பதாக கூறி இருந்தார்.

முதல் காதல் - இது சிலருக்கு ரம்யமான நினைவுகளும், பசுமையான காலங்கள், பலருக்கு மரணபடுக்கையிலும் நெஞ்சினுள் முள்ளு,எழுகடல் தாண்டி நின்றாலும் சுற்றி சுற்றி வந்து நினைவலைகளில் கண்களை ஈரமாகும் அமிலத் திரவியம். அதுவும் தனிமை மட்டும் கிடைத்துவிட்டால், இந்த காதலின் ரணம், எத்தனை வருடங்களானாலும் படுத்துற பாடு இருக்கே, என்னவென்று சொல்லுவது...,

முதல் காதல் என்றும் பசுமரத்து ஆணி தான், காலங்கள் மாறி கோலங்கள் மாறி இருந்தாலும் காதல் என்றும் காதல் தான்.

ஒரு காலகட்டத்தில் காதலில் வெற்றியின்றி தனி மரமாய் காதலுக்கா வாழ்த்த காதலர்களையும் கண்டது இந்த பூமி, ஆனால் இன்றய காலகட்டத்தில், இயந்திர வாழ்கையில் "காதல் என்பது ஒரு செடியே தவிர பூ அல்ல" என யதார்த்த வாழ்க்கைக்கு காத்திருப்புகள் இன்றி, கால ஓட்டத்துக்கு ஏற்ப மாறினாலும், மனதின் எது ஒரு மூலையில் முதல் காதல் என்றும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது......