Showing posts with label Bhahiyaraj. Show all posts
Showing posts with label Bhahiyaraj. Show all posts

Tuesday, March 8, 2011

பாக்யராஜுக்கு சீட்டு திமுகவில்

திமுகவில் சீட் கேட்டு விருப்ப மனு செய்திருக்கிறார் கல்கி என்ற திருநங்கை. இவர் நர்த்தகி திரைப்படத்தின் நாயகியும் கூட.

பொள்ளாச்சி பகுதியில் நின்றால் தனக்கு பெருவாரியான வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறாராம். காரணம் இவர் பிறந்ததும் அங்குதான். இவருக்கு நெருக்கமான உறவுகள் அங்கே பெரிய தொழிலதிபர்களாகவும் இருக்கிறார்களாம்.

இது ஒரு புறம் இருக்க, திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜுக்கு இந்த முறை தேர்தலில் சீட் கொடுக்க தீர்மானித்திருக்கிறார்களாம் திமுகவில். ஒருவேளை மைலாப்பூர் திமுக வுக்கு ஒதுக்கப்பட்டால் பாக்யராஜ் நிற்பார் என்கிறார்கள் திரையுலகத்தில்.

அதுவே காங்கிரசுடன் கூட்டணி என்றால், எஸ்.வி.சேகருக்கு வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் உடன் பாடு தொடர்பாக பிணக்கு இருப்பதால், இருவருமே எதிர்த்து நின்றால் கூட ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.